எமது தொலை நோக்கு

சிறந்த செயற்பாட்டுதன்மை கொண்டதும் வினைத்திறனான பொதுச் சேவையை வழங்குவதுமான ஒரு நிகரற்ற தாபனமாக திகழ்தல்.
 

எமது குறிக்கோள்

பொது மக்கள் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பு, வள ஒருங்கிணைப்பு மற்றும் சிறப்பான செயற்பாட்டுத் தன்மை கொண்ட பிரதேச மட்ட நிர்வாகத்துடன் கூடிய வகையில் வினைத்திறனானதும் நிலைத்திருக்கத் தக்கதும் நன்கு திட்டமிட்டதுமான அபிவிருத்தி செயன்முறையூடாக இப்பிரதேச மக்களின் வாழ்க்கைத்தரத்தை அதிகரித்தல்.

 

பிரதேச செயலகத்தின் தோற்றம்


1968 இல் திருக்கோவிலுக்கென்று  தனியான சுற்றுலா பிரிவுக்காரியாதிகாரி கந்தோர் ஒன்று தம்பிலுவில் கிராமாட்சி மன்ற கட்டடத்தில் ஆரம்பமானது. அவ்வேளை இத் திருக்கோவில் பிரதேச காரியாதிகாரி மூன்று கிராம சேவக பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது தம்பிலுவில் வடக்கு, தம்பிலுவில் கிழக்கு, திருக்கோவில் போன்றவையாகும் பின்னர் விநாயகபுரம் கிராமசேவையாளர் பிரிவு 01-02-1977 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு நிர்வாகம் நடைபெற்றுவந்தது அதன் பின்னர் பல அரசியல் தலையீடுகள் காரணமாக திருக்கோவிலுக்கென தனியானதோர் காரியாலயம் உருவாக்கப்பட்டது திருக்கோவிலில் அரச கட்டடங்கள் இல்லாத காரணத்தினால் தனியார் கட்டடம் ஒன்றில் நடாத்தப்பட்டது.
                              மறைந்த பாராளுமன்ற உறுப்பினரும் அரசியல் அதிகாரயுமான எம்.கனகரெத்தினம் அவர்களின் அயராத உழைப்பினால் தனியான கட்டடம் ஒன்று 1978 ஆம் ஆண்டு கட்டப்பட்டதுடன் அதன் பெயரும் மாற்றம் பெற்று உதவி அரசாங்க அதிபர் அலுவலகமாகவும் பின்னர் பிரதேச செயலகமாகவும் நடைபெற்று வந்தது. இதில் முதன் முதலாக மறைந்த திரு.எஸ்.வி.ஆர் வேதநாயகம் அவர்கள் உதவி அரசாங்க அதிபராக பல வருடங்களாக கடமையாற்றி வந்துள்ளார் 1983 இல் தனியான புதியதோர் கட்டடத்திற்கு மாற்றப்பட்டு செயற்பட்டு வந்தது. 1989 ஆம் ஆண்டு ஜனசக்தி நிகழ்ச்சி திட்டம் செயற்பாட்டிற்கு வந்தபோது 4 கிராம சேவகர் பிரிவுகளும் 22 கிராம சேவையாளர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இத் திட்டம் செயற்பட ஆரம்பித்தது 02.10.1993 பிரதேச செயலகம் உருவாக்கபம் பெற்று திரு.மே.இராஜசெல்வகுமார் (இ.நி.சே) அவர்கள் பிரதேச செயலாளராக நியமனம் பெற்று கடமையாற்றினர்.

 


 

கடமை புரிந்த நிறுவனத் தலைவர்கள்

பெயர் காலம்
 திரு. R.வேதநாயகம் 1978 1990
திரு. T.சச்சிதானந்தம்  1990 1991
திரு. P.இராஜசெல்வகுமார் 1991 1996
கலா.S.அமலநாதன்    1996 2002
திரு.A.K.தவராஜா 2002 2005
திரு.S.கரன் 2005 2006
திரு.V.அழகரெட்னம்   2006 2011
திரு.M.கோபாலரெட்ணம் 2012 2013
திரு.S.ஜெகராஜன் 2014 2019
திரு.T.கஜேந்திரன் 2019 இதுவரை

News & Events

17
Jun2021
Covid - 19 Pass Checking During Travel Restriction Period

Covid - 19 Pass Checking During Travel Restriction Period

தற்போது நாட்டில் ஏற்பட்டுவரும் கொவிட்19 தெற்று தீவிரத்தினால் நாடு...

17
Jun2021
Covid - 19 Relief Assistance Provided

Covid - 19 Relief Assistance Provided

தற்போது நாட்டில் நிலவி வரும் கொவிட்19 மூன்றாவது அலை...

Scroll To Top